Close Menu
    What's Hot

    இந்தோனேசியாவில் சிவன் கோவில்..!! பிரதமர் மோடி வழிபாடு..!!

    ரூ.92ஆயிரம் கோடிப்பே…. இந்திய பொருளாதாரத்தில் பீர் தொழிற்சாலைகளின் பங்களிப்பு!

    மின் தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு; புதிய திட்டம் அறிமுகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆஹா சமோசா… நடுவழியில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட் – மத்தியப் பிரதேசத்தில் நடந்தேறிய கூத்து!
    Featured

    ஆஹா சமோசா… நடுவழியில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட் – மத்தியப் பிரதேசத்தில் நடந்தேறிய கூத்து!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 samosa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சமோசா சாப்பிட ஆசைப்பட்ட லோகோ பைலட் ரயிலை நடுவழியில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்தூர் – மஹே, டெமு ரயிலின் லோகோ பைலட்டுக்கு திடீர் என சமோசா சாப்பிடும் ஆசை உந்தி தள்ளியுள்ளது. இதனால், ரயில் செல்லும் வழியில்  தண்டவாளம் அருகே சமோசா கடை இருப்பதைப் பார்த்த அவர், உடனடியாக அங்கேயே நடுவழியில் ரயிலை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று அந்த சமோசா கடையில் சமோசா வாங்கிவிட்டு, பின்னர் சாவகாசமாக நடந்து சென்று ரயிலில் ஏறி அதனை இயக்கிச் சென்றுள்ளா.

    நடுவழியில் ரயிலை நிறுத்தி சமோசா வாங்கிச் சென்ற லோகோ பைலட்டின் சமோசா ஆசை குறித்து அந்தப் பகுதியில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட இப்போது அது வேகமாகப் பரவி வருகிறது.

    ஒரு ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டால் அடுத்த நிறுத்தத்தில் மட்டும்தான் நிறுத்தவேண்டும். இடையில் ஏதேனும் இயற்கை சீற்ற பாதிப்போ அல்லது, ரயிலில் எதிர்பாராத கோளாறோ ஏற்பட்டால், உடனடியாக அது குறித்து அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு தகவல் அளித்தபின்னரே ரயிலை நிறுத்த வேண்டும்.

    ஆனால், இந்த லோகோ பைலட்டோ, எந்தவித தகவலும் கொடுக்காமல், சமோசாவுக்காக ரயிலை நிறுத்தியது தற்போது இந்த வீடியோவினால் பேசு பொருளாகியுள்ளது.

    இது தொடர்பாக ரத்லாம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) முகேஷ் குமாரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது,

    “இந்த தகவல் எங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக கிடைத்தது. சமூக வலைதளங்களில் பரவியுள்ள இந்த வீடியோவை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.

    இருப்பினும், இந்த வீடியோ எங்கள் ரயில்வே கோட்டத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. எனவே, வீடியோ எடுக்கப்பட்ட இடம், சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர் மற்றும் ரயிலை அடையாளம் காணும் பணியில் விசாரணை நடைபெற்று வருகிறது. வீடியோவைப் பார்க்கும்போது அது சரக்கு ரயில் போல் தெரிகிறது.

    விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    ஜூலை 7ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்டுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.இதனால் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி அவர் ஆவடி ரயில் நிலையத்தில் ரயிலை உடனடியாக நிறுத்திய நிலையில், ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மாற்று ஓட்டுநர் வரும் வரை சுமார் 45 நிமிடங்கள் ரயில் அங்கேயே நின்று அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    Indore train news Loco pilot stops train Madhya Pradesh viral video train halted for samosas
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்!. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக் கொலை!
    Next Article கல்விக் கட்டணம் – தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    இந்தோனேசியாவில் சிவன் கோவில்..!! பிரதமர் மோடி வழிபாடு..!!

    July 8, 2026

    ரூ.92ஆயிரம் கோடிப்பே…. இந்திய பொருளாதாரத்தில் பீர் தொழிற்சாலைகளின் பங்களிப்பு!

    July 8, 2026

    மின் தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு; புதிய திட்டம் அறிமுகம்

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தோனேசியாவில் சிவன் கோவில்..!! பிரதமர் மோடி வழிபாடு..!!

    ரூ.92ஆயிரம் கோடிப்பே…. இந்திய பொருளாதாரத்தில் பீர் தொழிற்சாலைகளின் பங்களிப்பு!

    மின் தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு; புதிய திட்டம் அறிமுகம்

    நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களான தனியார் மருத்துவக் கல்லூரிகள் – சட்டநடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டம்!

    காக்களூர் ஏரியில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!. துர்நாற்றத்தால் மக்கள் அவதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.