Close Menu
    What's Hot

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போர்க்களமான டெல்லி..! ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு..! மாணிக்கம் எம்.பி கண்டன அறிக்கை..!
    Featured

    போர்க்களமான டெல்லி..! ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு..! மாணிக்கம் எம்.பி கண்டன அறிக்கை..!

    Editor web4By Editor web4July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 23
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற விவகாரத்தில் பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதானை பதவி நீக்க கோரி அவரது வீட்டின் அருகே தலைவர் திரு.ராகுல்காந்தி, திருமதி. பிரியங்கா காந்தி ஆகியோர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று  கைது செய்த கொடுமை நிகழ்ந்துள்ளது. மக்களவை எதிர்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் திரு. ராகுல்காந்தி அவர்களை மோடி அரசு இத்தகைய அநாகரீக அணுகுமுறையைக் கடைபிடித்து கைது செய்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வதாக அறிவித்தார். தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர் சில நாட்களில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேநாளில், நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்திய ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது, அமித்ஷாவின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

    ஜனநாயக நாட்டில் ஊர்வலமாக சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் மீது தடியடி நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி, திருமதி. பிரியங்கா காந்தி ஆகியோர் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டது ஆட்சியாளர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.

    மாணவர்களின் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசு இத்தகைய அடக்குமுறைகளை ஏவி வருகிறது. சர்வாதிகார நாட்டில் தான் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை காண முடியும். ஆனால், மோடி ஆட்சியில் சர்வாதிகார அணுகுமுறையோடு மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் நடவடிக்கைகளுக்கு மோடி அரசு மிகப்பெரிய விலையை  கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூலை 20 போராட்டம் வெறும் டிரெய்லர் தான்!. மாபெரும் போராட்டத்திற்கு இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்!. CJP எச்சரிக்கை!
    Next Article CJP போராட்டத்தின் உண்மையான நோக்கம் நாட்டை குழப்புவதே..!! ஸ்ரீதர் வேம்பு பாய்ச்சல்..!!
    Editor web4

    Related Posts

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    July 22, 2026

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    July 22, 2026

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    ஜப்பானில் மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ் கண்டுபிடிப்பு..! விலை என்ன தெரியுமா?

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.