மேகதாது விவகாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக ஒன்றிய அமைச்சர் பேசி வருவதாக பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி விமர்சித்துள்ளார்.

சேலத்தில்,  தருமபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது…

மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது.

காவிரி படுகையில் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகதாது குறித்து முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அப்போது கடைமடை மாநிலத்தின் அனுமதி தேவை இல்லை என ஒன்றிய அமைச்சர் கூறி இருப்பது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானதாகும்.

எந்த ஒரு நதிநீர் படுகையிலும் அணை அல்லது கட்டுமானங்களை மேற்கொள்ளும் போது கடைமடை மாநிலத்தின் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

நாடாளுமன்றத்தில் அன்புமணி எம்பி மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஒன்று இணையமைச்சர் ஒன்றிய அரசும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும் அத்தகைய அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என தெளிவுபடுத்தி உள்ளார்கள்.

எனவே மேகதாது அணை குறித்து பேசுவதற்கே இனி இடமில்லை.

காவிரியில் கிடைக்கும் 750 டி எம் சி தண்ணீரில் தமிழகத்தின் உரிமையான பங்கு 144 டிஎம் சியாக இருந்தது. ஆனால் அது குறைக்கப்பட்ட தற்போது 122 டிஎம்சி தண்ணீர் 12 மாதங்களாக பிரித்து வழங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையோ காவி நடுவர் மன்ற தீர்ப்பையோ அல்லது ஒன்றிய அரசின் உத்தரவுகளையும் மதிப்பதே இல்லை தாங்கள் அணைகள் நிரம்பிய பிறகு உபரிநீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடுகிறார்கள் தவிர நமக்கு உரிய சட்டபூர்வமான உரிமை அளிக்கப்பட்ட நீரைக் கொடுப்பதில்லை.

தமிழகத்திற்கு சேர வேண்டிய உரிய தண்ணீரை பெற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அன்புமணியும் இதனை தொடர்பு வலியுறுத்தி வருகிறார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version