கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் மலை கிராமத்திலும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாரண்டஹள்ளி பகுதியிலும் இன்று மாலை 7.52 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. பூமியின் அடிப்பரப்பில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் லேசான அளவிலான நிலநடுக்கம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகும் நில அதிர்வுகளால் கட்டிடங்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இது பூமியின் உள்ளமைப்பில் ஏற்படும் சாதாரண அழுத்த வெளியீடு மட்டுமே எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஏதேனும் சேதம் அல்லது அசாதாரண அதிர்வு உணரப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version