மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தவெக பெண் நிர்வாகியுடன் ஆட்டம்போட்டது பேசு பொருளாகியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரில் முதல்வர் விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பத்து வயது சிறார்கள் முதல் சுமார் 1500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க வந்த மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உயர் கல்வித் துறை அமைச்சருமான விஸ்வநாதன் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தில் வரும் தளபதி கச்சேரி என்ற பாடலுக்கும், சச்சின் திரைப்படத்தில் வரும் வாடி வாடி கைப்படாத சிடி என்ற பாடலுக்கும் த வெ க பெண் நிர்வாகி உடன் குத்தாட்டம் போட்டார்.

1500 க்கும் மேற்பட்ட மாரத்தான் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மாணவிகளும் உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினர். உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் அரசு பள்ளி வளாகத்தில்

த.வெ.க பெண் நிர்வாகி உடன் குத்தாட்டம் போட்டது பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, அரசியல் களத்தில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version