Close Menu
    What's Hot

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்
    Featured

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சுதந்திர தினத்தில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றும் ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்துக்கான, பிரதமர் அழைப்பை பெற்றி பெற செய்வோம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    பிரதமரின்  136-வது மனதின் குரல் உரை வீரத்தையும், தற்சார்பையும், தேசப்பற்றையும் போற்றியிருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பிரதமர் தனது உரையில், கார்கில் விஜய் திவாஸ் நன்னாளில், நாட்டின் எல்லையைக் காக்க வீரமரணமடைந்த நமது இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, ‘சௌர்யா விஜய் யாத்திரை’ குறித்தும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS மகேந்திரகிரி போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டதையும், பினாகா ராக்கெட் மற்றும் குஷா ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதையும் தற்சார்பு பாரதத்தின் உயரிய வலிமைக்குச் சான்றுகளாகப் சுட்டிக்காட்டியதாகக் கூறியுள்ளார்.

    விளையாட்டுத் துறையில் பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பட்டம் வென்றதையும், லார்ட்ஸ் மைதானத்தில் நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றதையும், விண்வெளித் துறையில் ‘விக்ரம்-1’ ராக்கெட்டின் வெற்றியையும் மற்றும் சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்களில் நமது மாணவர்கள் பெற்ற பதக்கங்களையும் பாராட்டிய பிரதமர், நாட்டின் இளைய சமுதாயத்தின் திறமையையும் அறிவாற்றலையும் பெருமையுடன் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

    இறுதியாக, ஜூலை 27 அன்று பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உன்னத ஆசிரியர் பணியைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி, நமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி ‘ஹர் கர் திரங்கா’ (Har Ghar Tiranga) இயக்கத்தை மக்கள் அனைவரும் மாபெரும் வெற்றியாக்க வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, நாமும் பெருமையுடன் தேசக் கடமையை ஆற்றுவோம் எனத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    BJP Tamil Nadu Har Ghar Tiranga Independence Day Nainar Nagendran National Flag Campaign
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்
    Next Article கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    July 26, 2026

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    July 26, 2026

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.