Close Menu
    What's Hot

    ”முதுமையில் மறதி நோய் தலைவிதி அல்ல” – மருத்துவ உலகம் சொல்லும் தீர்வு…

    தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!

    நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!
    Featured

    தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!

    Editor web2By Editor web2July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    corona virus
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் அதிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸ் பரவி வருவதாக எழுந்துள்ள தகவல்களுக்குப் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை முற்றிலும் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

    கடந்த ஆண்டுகளை விட தற்போது கொரோனா தொற்று மிகவும் குறைவாகவே உள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டாம் என்றும், வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    அண்மையில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் குறித்து அரசுத் துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 வயது நபர் தீவிர பாக்டீரியா தொற்று (Klebsiella pneumoniae), நீரிழிவு மற்றும் நீண்டகாலச் சிறுநீரக நோய் காரணமாகவே உயிரிழந்தார். மற்றொரு 68 வயது நபர் பெருங்குடல் புற்றுநோயால் ஏற்பட்ட சுவாசச் செயலிழப்பால் மரணமடைந்தார்; இவருக்குக் கோவிட் தொற்று என்பது தற்செயலாக மட்டுமே கண்டறியப்பட்டது.

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP) கீழ் வழக்கமான பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 2024-ல் 990 பேருக்கும், 2025-ல் 1,250 பேருக்கும், நடப்பு 2026-ஆம் ஆண்டில் இதுவரை 335 பேருக்கும் மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான மருத்துவக் கண்காணிப்பில் கண்டறியப்பட்டதே தவிர, சமூகப் பரவல் (Outbreak) கிடையாது. புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் (NIV) பரிசோதனை முடிவுகளும் தற்போது பரவும் வைரஸ் லேசான அறிகுறி கொண்டது தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

    இருப்பினும், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும்; காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகுமாறும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    Covid19Update FakeNews PublicHealthTN TamilNaduHealth
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!
    Next Article ”முதுமையில் மறதி நோய் தலைவிதி அல்ல” – மருத்துவ உலகம் சொல்லும் தீர்வு…
    Editor web2
    • Website

    Related Posts

    ”முதுமையில் மறதி நோய் தலைவிதி அல்ல” – மருத்துவ உலகம் சொல்லும் தீர்வு…

    July 13, 2026

    லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?!

    July 13, 2026

    ”RSS அரசியலின் தமிழாக்கம்தான் அண்ணாமலை; அது மிகவும் ஆபத்தானது”

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”முதுமையில் மறதி நோய் தலைவிதி அல்ல” – மருத்துவ உலகம் சொல்லும் தீர்வு…

    தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!

    நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

    லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?!

    ”RSS அரசியலின் தமிழாக்கம்தான் அண்ணாமலை; அது மிகவும் ஆபத்தானது”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.