Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?!
    தமிழ்நாடு

    லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?!

    Editor web2By Editor web2July 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Arun IPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் (DVAC) இயக்குனர் அ.அருண் ஐபிஎஸ், பதவியேற்ற சில நாட்களிலேயே அதிரடியாக மாற்றப்பட்டு, தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

    அவருக்குப் பதிலாக லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. சி.மகேஸ்வரி இப்பதவியைக் கூடுதலாகக் கவனிப்பார் என உள்துறைச் செயலர் அறிவித்துள்ளார். த.வெ.க அரசு அமைந்தவுடன் வழங்கப்பட்ட இந்த மிக முக்கியப் பொறுப்பிலிருந்து அருண் திடீரென தூக்கியடிக்கப்பட்டதன் பின்னணியில் அடுக்கடுக்கான அதிரடிச் சர்ச்சைகளும், கடுமையான குற்றச்சாட்டுகளும் ஒளிந்திருக்கின்றன.

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பதவியேற்றவுடன், சென்னை முன்னாள் காவல் ஆணையரான அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டது முதலே அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியது. கடந்த திமுக ஆட்சியில் த.வெ.க-வின் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்துக் கறார் காட்டிய ஒரு அதிகாரிக்கு, ஊழலை ஒழிக்கும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவி வழங்கப்பட்டதற்குத் த.வெ.க தொண்டர்களிலேயே அதிருப்தி நிலவியது. மேலும், விசிக தலைவர் திருமாவளவன் பரிந்துரையின் பேரில் தான் அருணுக்கு இப்பதவி வழங்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையை, திருமாவளவன் அண்மையில் மறுத்திருந்தார்.

    இந்தச் சூழலில், அண்மையில் எ.வ.வேலு உள்ளிட்ட சில முக்கிய திமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனைகளை  நடத்தியது. ஆனால், இந்த மெகா ரெய்டுகளில் எதிர்பார்த்தபடி பெரிதாக எந்தவொரு ஆவணங்களோ அல்லது பணமோ சிக்கவில்லை. இதனால், “ரெய்டு நடப்பதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்குத் துறை ரீதியான தகவல்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டன” என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டு அரசு வட்டாரத்திலும், அரசியல் தளத்திலும் வெடித்தது. இந்தத் தகவல் கசிவு விவகாரம் த.வெ.க தலைமைக்குக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, ‘சவுக்கு’ சங்கர் உள்ளிட்டோர் மீது இவர் ‘குண்டாஸ்’ சட்டத்தைப் பழிவாங்கும் நோக்கில் தவறாகப் பயன்படுத்தியதாகச் சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் இவருக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தது. “பழிவாங்கும் உள்நோக்கத்துடன் குண்டாஸ் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பழக்கமுடையவர்” என்று நீதிமன்றம் இவரைச் சாடியதோடு, உயரிய தார்மீகத் தகுதியுடையவர்கள் அமர வேண்டிய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் நாற்காலியில் இவரை அமர்த்தியது தகாது என்ற விமர்சனங்களும் எழுந்தன.

    நீதிமன்றத்தின் குட்டு, முன்னாள் அமைச்சர்களின் ரெய்டு தகவல் கசிந்த விவகாரம் மற்றும் கூட்டணிச் சர்ச்சைகள் என நாலாபுறமிருந்தும் எழுந்த முட்டுக்கட்டைகளால் த.வெ.க அரசுக்கு ஏற்பட்ட கடும் நிர்வாக நெருக்கடியே, இறுதியாக இன்று அருணின் அதிரடி இடமாற்றத்திற்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ArunIPS DVACRaidLeak PoliceTransferTN TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”RSS அரசியலின் தமிழாக்கம்தான் அண்ணாமலை; அது மிகவும் ஆபத்தானது”
    Next Article நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!
    Editor web2
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.