Close Menu
    What's Hot

    விநாயகர் சதுர்த்திக்காக மண் விநாயகர் சிலைகளையே வாங்குங்கள் : ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

    செஷெல்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை; இருதரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை

    மரியாதையுடன், கண்ணியத்துடன் இறுதி ஊர்வலம்; தமிழக அரசுக்கு பாக்யராஜ் குடும்பத்தினர் நன்றி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சட்டப்பேரவையில் முதலமைச்சர் டான்ஸ் ஆடுவார்–  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  எதிர்பார்ப்பு
    Featured

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் டான்ஸ் ஆடுவார்–  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  எதிர்பார்ப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 udhay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் தஞ்சை மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் க.முத்தமிழ்ச்செல்வனின் மகன் மலரவன் – காவ்யாஸ் திருமண விழா நடைபெற்றது. இத்திருமணவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், ஷோபா மாடல் ஆட்சியின் போலிப் பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் அடித்து துவைக்கப்பட்டு கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த ஆட்சியின் சறுக்கல்களை, தவறுகளை இளைஞர்கள் இன்று தட்டிக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவ்வாறு தட்டிக் கேட்கும் இளைஞர்களை, திமுகவினரை இந்த சோபா மாடல் ஆட்சி கைது செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

    தூயசக்தி எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக்கு வந்த ஐந்தாவது நிமிடத்திலேயே குதிரைபேரத்தை தொடங்கி விட்டனர்.

    011 udhay A

    சோபா போகும், பின்னாடியே முதலமைச்சர் போவார், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு அவருக்குப் பின்னால் போகக் கூடிய காட்சிகள்தான் இந்த ஒரு மாதத்தில் ரிப்பீட் மோடில் நடந்து கொண்டிருக்கிறது.

    ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் காவிரி நீரை திறக்கவில்லை. குறுவை சாகுபடிக்கு அரசு அறிவித்த ஸ்பெஷல் பேக்கேஜ் போதாது என விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

    இதனை சட்டமன்றத்தில் பேசினால், விவசாயிகளை நாங்கள் தூண்டிவிடுவதாக அவர்களை முதலமைச்சர் கொச்சைப்படுத்துகிறார்.

     தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை படுபாதாளத்தில் இந்த ஆட்சி தள்ளியிருக்கிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசினால், அதற்கு முதலமைச்சர் பதில் சொல்வது இல்லை. சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக்கி அதன் தரத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அப்பாவை காணோம் என குட்டிக்கதை கூறும் முதலமைச்சரைத்தான் காணவில்லை என பெரம்பூர் தொகுதி மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

    கிண்டல் செய்வதாகக் கூறி தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் முதலமைச்சர், சட்டமன்றத்தில் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை. அடுத்த கூட்டத்தில் அதுவும் ஆடுவார் என்பது எங்களின் எதிர்பார்ப்பு. இவ்வளவு பெரிய பேரிடரில் மாட்டியிருக்கும் தமிழ்நாட்டை காப்பது நமது பொறுப்பு.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    Chief Minister Opposition Leader Tamil Nadu Assembly Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!
    Next Article நீளம் தாண்டுதல் : புதிய சாதனை படைத்த கேரள வீராங்கனை..! அஞ்சு ஜார்ஜ் சாதனை முறியடிப்பு..!
    Editor TN Talks

    Related Posts

    விநாயகர் சதுர்த்திக்காக மண் விநாயகர் சிலைகளையே வாங்குங்கள் : ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

    June 28, 2026

    செஷெல்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை; இருதரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை

    June 28, 2026

    மரியாதையுடன், கண்ணியத்துடன் இறுதி ஊர்வலம்; தமிழக அரசுக்கு பாக்யராஜ் குடும்பத்தினர் நன்றி

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விநாயகர் சதுர்த்திக்காக மண் விநாயகர் சிலைகளையே வாங்குங்கள் : ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

    செஷெல்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை; இருதரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை

    மரியாதையுடன், கண்ணியத்துடன் இறுதி ஊர்வலம்; தமிழக அரசுக்கு பாக்யராஜ் குடும்பத்தினர் நன்றி

    லஞ்ச ஒழிப்புத்துறை  இயக்குநரால் முதல்வருக்கு அவப்பெயர் – யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

    நீளம் தாண்டுதல் : புதிய சாதனை படைத்த கேரள வீராங்கனை..! அஞ்சு ஜார்ஜ் சாதனை முறியடிப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.