திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பதாகவும், அழுகுனிப் பாப்பாவாக அவலநிலைக்கு செல்வதாகவும் தவெக ஐடி விங்க் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;-
“நான்தான் முதல்வர்… நான்தான் முதல்வர்…” என்கிறார் தீயசக்தி திமுக என்ற கார்ப்பரேட் குடும்பக் கம்பெனித் தலைவர் கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கனவு காண்பதை தன் வீட்டில் கண்டால் பரவாயில்லை. அதை ஒரு கல்யாண வீட்டில் காண்கிறார். அதுவும் பட்டப்பகலில் கனவு காண்கிறார். கனவு காண்பது அவரவர் உரிமை.
பவளவிழாப் பாப்பாவை பால்டப்பா போல உருட்டுகிறார் ஜூனியர். இப்போது சீனியரும் சேர்ந்து உருட்டுகிறார். தமிழ்நாட்டையே உருட்டு உருட்டு என உருட்டியவர்கள் இப்போது ஆட்சி அதிகாரம் கனவாகிப் போனக் கடுப்பில் கல்யாண வீட்டில் போய் ‘நான்தான் முதல்வர்’ என பகல் கனவுப் பாட்டுப் பாடுகிறார்.
பவளவிழாப் பாப்பா போகிறப் போக்கில் அவலவிழாப் பாப்பாவாக மாறி அழுமூஞ்சிப் பாப்பாவாக ஆகி இருக்கிறது. இறுதியில் அழுகுனிப் பாப்பாவாக மாறும் அவல நிலைக்குச் செல்லப் போவது உறுதி.

