Close Menu
    What's Hot

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை
    Featured

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    Editor web1By Editor web1June 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Pak
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகாலப் போர் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் 24 மணி நேரத்தில் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து போரைத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறித்தும், இஸ்ரேல் மீதும் ஈராக் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்த மோதலால், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தீவிரமாக மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இரு தரப்பு பிரதிநிதிகளும் இஸ்லாமாபாதில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த அமைதி ஒப்பந்தம் போர் நிறுத்தத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்துவிடுதல் மற்றும் இரு நாடுகளும் தங்கள் மோதல் போக்கைக் கைவிடுதல் ஆகியவை இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்திற்கான இறுதி வரைவை ஏற்றுக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சனிக்கிழமை (ஜூன் 13) தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்குள் மின்னணு முறையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    பாகிஸ்தான் பிரதமர் இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று கூறியிருந்தாலும், ஈரானிய வெளியுறவு அமைச்சகம் இதனை முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தாகும் தேதி குறித்து ஊகங்களைத் தவிர்க்குமாறும், பொருத்தமான நேரத்தில் அனைத்து விவரங்களும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் குறித்த வதந்திகளைக் கவனத்தில் கொள்ள வேண்டாம் என்றும், இரு நாட்டு நலன்களையும் பாதுகாக்கும் வகையிலான ஒரு சிறந்த தீர்விற்காக முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!
    Next Article இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை
    Editor web1
    • Website

    Related Posts

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    June 13, 2026

    கொளுத்தும் வெயில்: தமிழகத்தின் 7 இடங்களில் சதமடித்த வெப்பநிலை!

    June 13, 2026

    தென்மாவட்ட ரயில் சேவைகளில் முக்கிய மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    ‘எல்லாம் இனிதே’!- ‘சேயோன்’ புதிய புகைப்படம் வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.