டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களை நோக்கிப் பேசிய காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ஊடகங்கள் இந்த அரசின் வலையில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார். அரசாங்கம் கேட்க விரும்பும் கேள்விகளை மட்டுமே ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கேட்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டின் இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரதமர் இன்னும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்றும், நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் பேசுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

மாணவர்களின் கோரிக்கைகள், மருத்துவமனைகளில் உள்ள சிறுவர்கள் நிலை, மற்றும் இணையத் துண்டிப்புகள் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடம் ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும், அவர்கள் எப்போது பதவி விலகப் போகிறார்கள் என்பது குறித்தும் ஊடகங்கள் கேள்வி கேட்பதில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

“தேர்வுத் தாள் கசிவு ஏன் நடந்தது? அதற்கு கல்வி அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது? அதற்கு உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
இந்த இரண்டு விவகாரங்களிலும் ஏன் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை? அதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version