த்திய அரசுப் பணியில் (Central Deputation) இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரை நில நிர்வாகக் ஆணையராக நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை  வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுத் துறை (சிறப்பு-A) சார்பில் தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், “ஐஏஎஸ் கேடர் விதி 4(2)-ன் படி, நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் (Additional Chief Secretary / Commissioner, Land Administration) என்ற தற்காலிகப் பணியிடம் ஓராண்டு காலத்திற்கு உருவாக்கப்படுகிறது. இதில், ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட  ஆர். கஜலக்ஷ்மி ஐஏஎஸ்-க்குப் பதிலாக  ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தற்காலிகப் பணியிடம் ஐஏஎஸ் (ஊதிய) விதிகள் 2016-ன் படி, தலைமைச் செயலாளர் (Chief Secretary) அந்தஸ்து மற்றும் அதிகாரங்களுக்கு நிகரானது என்றும் அந்த அரசாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version