தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் எம். வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் பலத்தை சோதித்துப் பார்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தனியார் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த வீரபாண்டியன்,  மேலும், தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் “குதிரை பேர” அரசியல் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும் குறிப்பிட்ட அவர், இத்தகைய அநீதியான நடைமுறைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

எம்.எல்.ஏ.க்களை வாங்கி விற்கும் குதிரை பேரம் நம் கண்முன்னே நடக்கிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் நடந்தது போல, அது இப்போது தமிழ்நாட்டுக்கும் மெதுவாக பரவி வருகிறது. இதை உடனே தடுக்கவில்லை என்றால், மாநிலத்திற்கு நல்லதல்ல. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் நலனுக்காகவும், ஆட்சியில் நீடிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களிப்பது அதன் கொள்கையை நம்பித்தான். தேர்தலுக்கு முன் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினால் அது மக்களின் தீர்ப்புக்கு துரோகம். இது ஜனநாயகத்துக்கும் அரசியல் ஒழுக்கத்துக்கும் பெரிய நெருக்கடி. ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ யார் செய்தாலும், இடதுசாரிகள் இந்த குதிரை பேரத்தை எதிர்ப்பார்கள் என்றார்.

மேலும், எதிர்வரும் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து, தேர்தல் நெருங்கும் காலக்கட்டத்தில் நிலவும் சூழலைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version