கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு கரூர் செல்லாத முதலமைச்சர் விஜய், முதல்முறையாக இன்று அங்கு சென்றார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து கரூர் சென்றார். கரூர் வந்த முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து கரூர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு முதலமைச்சர் விஜய் வந்தடைந்தார். இந்த கூட்டத்திற்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சியில் நிகழ்ந்தை ஊழல்களை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது தனது திரைப்படமான வேட்டைக்காரன் படத்தில் வரும் ”புலி உறுமுது” பாடலை பாடி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக தாக்கி பேசினார்.  அதாவது, கொள்ளையடித்ததால் கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் ஓடு…ஓடு…ஓடு…ஓடு வரான் பாரு வேட்டைக்காரன் என ஓடிக்கொண்டே இருக்கிறார் என்று விமர்சித்தார். மேலும் மற்றொருவர் வெளிநாட்டில் ஓடி ஒளிந்துள்ளார். வெளிநாடு என்றதும் ஸ்டாலின் சார் என்று நினைக்கவேண்டாம். எனக்கு ஸ்டாலின் சார் மீது தனி பாசம் இருக்கிறது என்று சிரித்துக்கொண்டே முதல்வர் பேசினார்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version