பன்முகத் திறமையாளரும், உலகநாயகன் கமல்ஹாசனின் மகளுமான நடிகை ஸ்ருதி ஹாசன், தனது திரைப்பயணத்தில் நடிகை மற்றும் பாடகியாகத் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். ஏற்கனவே மும்பையில் சுமார் ரூ. 15 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களா ஒன்றை வைத்துள்ள ஸ்ருதி ஹாசன், தற்போது சென்னையிலும் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த புதிய இல்லத்தில் நேற்று கிரகப்பிரவேசம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
இந்த விசேஷ நிகழ்வில் ஸ்ருதி ஹாசனின் நெருங்கிய தோழிகள் மட்டுமே கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. தனது கலைப்பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு வரும் ஸ்ருதி ஹாசனின் இந்த புதிய தொடக்கத்திற்கு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் இணையவழியாகக் குவித்து வருகின்றனர்.
