Close Menu
    What's Hot

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக அரசு கொண்டுவந்த ‘ஸ்மார்ட் மீட்டர்’ டெண்டர் ரத்து?. ஊழல் புகார் எதிரொலியால் அதிரடி முடிவு!
    Featured

    திமுக அரசு கொண்டுவந்த ‘ஸ்மார்ட் மீட்டர்’ டெண்டர் ரத்து?. ஊழல் புகார் எதிரொலியால் அதிரடி முடிவு!

    Editor web3By Editor web3June 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Smart meter tender
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைத் தற்போதைய தவெக அரசு கைவிட முடிவு செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அரசியல் மற்றும் மின்வாரிய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மின் ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று மின் நுகர்வைக் கணக்கெடுக்கும் முறைக்கு மாற்றாக, ஆளில்லாமல் தானியங்கி முறையில் கணக்கெடுக்க ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோருக்கு 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.20,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த திட்டம் மொத்தம் 6 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டது.

    அதேசமயம் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, இந்த திட்டத்திற்கான விலைப்புள்ளிகளை திறந்து இறுதி செய்ய மின்வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இடையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றது.

    இதனை தொடர்ந்து தமிழக மின்வாரியத்தில் கடந்த சில காலமாகவே பல்வேறு கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில், இவ்வளவு பெரிய தொகையிலான திட்டத்தைத் தொடர்ந்தால் மேலும் சர்ச்சைகள் வெடிக்கும் என அரசு கருதுகிறது.

    மறுபுறம், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் மின் கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறி நுகர்வோர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஏற்கனவே மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதால், இப்போதைக்கு இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதே நல்லது என அரசு தரப்பு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகளைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி..!! ரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட்ட இளசுகள்..!!
    Next Article மீண்டும் பதற்றம்: ஈரானின் 2 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!
    Editor web3
    • Website

    Related Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    July 27, 2026

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    July 27, 2026

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    தவெகவில் சேருகிறாரா குஷ்பு..? – தலைமைச் செயலகத்துக்கு திடீர் வருகையால் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.