தமிழ்நாட்டின் நலனுக்கு ஒன்று சேர்ந்து குரல் எழுப்பவேண்டும் என தமிழ்நாட்டு எம்.பிக்கள் ஒரு மனதாக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் நீட்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் சிஜேபி இயக்கத்தினரும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல்காந்தி தலைமையில் பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் திமுக எம்.பிக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் அவர்கள் தனியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டு நலனில் அக்கறை காட்டாமல் எம்.பிக்கள் பிரிந்து நின்றதாகக் கருத்துகள் கூறப்பட்டன. கர்நாடகத்தில் பாஜக எம்.பி கூட காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்படும் நிலையில் தமிழக எம்.பிக்கள் கட்சி ரீதியாக பிரிந்து நிற்பதாகப் பேசப்பட்டது.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களை நாடாளுமன்றத்தில் உறுதியாகப் பாதுகாப்பது தொடர்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பிக்களைத் தவிர மற்றக் கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது, காவிரி நீர் உரிமை, தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version