Close Menu
    What's Hot

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வலுவான நிலையில் இந்திய அணி!. ஆப்கானை அலறவிட்ட கில்-பண்ட் ஜோடி!
    Featured

    வலுவான நிலையில் இந்திய அணி!. ஆப்கானை அலறவிட்ட கில்-பண்ட் ஜோடி!

    Editor web3By Editor web3June 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    afghanistan vs india test
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தனது அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, சமூக வலைதளங்களில் அவர் குறித்த மீம்கள் வைரலாகி வருகின்றன.

    ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட், எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

    ஆனால், முல்லன்பூரில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில்  களம் இறங்கிய பண்ட், தனது அதிரடியான ஆட்டத்தால் விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். நிதானமாகவும் அதே சமயம் தனக்கே உரிய பாணியில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டும் 70 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

    இந்த போட்டி ரிஷப் பண்ட்டின் 50-வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் எம்.எஸ்.தோனி, சையத் கிர்மானி ஆகியோருக்குப் பிறகு 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 3-வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

    Rishabh Pant meme

    ரிஷப் பண்ட்டின் இந்த விசித்திரமான ஃபார்மை வைத்து நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் விதவிதமான மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடக்கும்போது ‘கும்பகர்ணன்’ போல் தூங்கிவிட்டு, டெஸ்ட் போட்டி என்று வந்துவிட்டால் மட்டும் ‘ருத்ரதாண்டவம்’ ஆடுகிறார் என ரசிகர்கள் கிண்டலாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

    சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதற்கான ஒரு பயிற்சி யாக மட்டுமே பண்ட் ஐபிஎல் தொடரைப் பயன்படுத்துகிறார்” என்று நெட்டிசன்கள் அவர் குறித்து மீம்களைத் தட்டி விடுகின்றனர்.

    கேப்டன் சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் சதங்களைத் தொடர்ந்து, ரிஷப் பண்ட்டின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகப் பிரம்மாண்ட ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

    நேற்று தொடங்கிய முதல்நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து நிதானத்துடன் 2வது நாள் ஆட்டத்தையும் கடைபிடித்து வருகிறது இந்திய அணி. கே.எல்.ராகுலை தொடர்ந்து கேப்டன் கில்லும் சதம் விளாசி விளையாடி வருகிறார். அந்தவகையில், தற்போதைய நிலவரப்படி, 95 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி. கில் 174 பந்துகளில் 125 ரன்களுடனும், பந்த் 99 பந்துகளில் 68 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபல லட்சங்களை தாண்டும் உறுப்பினர் சேர்க்கை..!! அண்ணாமலையின் தரமான செய்கை..!!
    Next Article வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு!. மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    July 27, 2026

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    July 27, 2026

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    தவெகவில் சேருகிறாரா குஷ்பு..? – தலைமைச் செயலகத்துக்கு திடீர் வருகையால் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.