திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனின் இல்ல திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது.
திருமணத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக முன்னணியினர் கலந்து கொண்டனர். மு.க.ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். தொடர்ந்து மு.க.ஸ்டாலினிடம் மணமக்கள் வாழ்த்து பெற்றனர்.

திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் தோல்வியைச் சுட்டிக்காட்டி, யாரும் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இருக்கும் வரை, தமிழ்நாட்டை ஆள்வது திராவிட மாடல் ஆட்சிதான் என உறுதி தெரிவித்தார்.
வெற்றி தோல்விகளை சமமாக கருதி உழைத்துக் கொண்டிருக்கும் இயக்கம் திமுக எனக் கூறிய மு.க.ஸ்டாலின் திமுக பல வெற்றிகளையும் கண்டுள்ளது; பல தோல்விகளையும் சந்தித்துள்ளத என கூறி முந்தைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டினார்.
தோல்வி நேரத்தில் பீனிக்ஸ் பறவை போல திமுக எழுச்சி பெறும் என நம்பிக்கையூட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் தோல்வி குறித்து அனைவரிடமும் கருத்துக்கேட்பு நடத்த 36 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதைச் சுட்டிககட்டி பேசினார்.
தற்போதைய ஆளும் கட்சியினர் எந்த பணியும் செய்யாமல் ஆட்சிக்கு வந்திருப்பதாகவும், திமுக கொண்டு வந்த திட்டங்களை தான் அவர்கள் செயல்படுத்துவதாகவும், திமுகவின் சாதனைகளை யாராலும் மாற்ற முடியாது எனவும் கூறினார்.
வாக்காளர்களை சந்திக்காமல், முகவர்களை நியமிக்காமல் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. நாம் அனைத்து பணிகளையும் செய்து தோற்றோம்; அவர்கள் எந்த பணியும் செய்யாமல் வெற்றிபெற்றனர் எனக் கூறினார்.
திமுக மீண்டும் எழும், அதுவரை நமது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம் என்றார்.
