Close Menu
    What's Hot

    ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வாட்ஸ்அப் ‘Username’ விவகாரம்!. பதிலளிக்காத மெட்டா நிறுவனம்!.
    Featured

    வாட்ஸ்அப் ‘Username’ விவகாரம்!. பதிலளிக்காத மெட்டா நிறுவனம்!.

    Editor web3By Editor web3July 9, 2026Updated:July 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    whatsapp 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாட்ஸ்அப்பின் புதிய ‘Username’ அம்சம் தொடர்பாக மத்திய அரசு எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க மெட்டா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் (ஜூலை 9) முடிவடைந்துள்ளது.

    வாட்ஸ்அப்பில் செல்போன் எண் பகிரப்படாமல், தனித்துவமான ‘Username’ மூலம் பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் இணையவழி மோசடிகள், ஃபிஷிங் (Phishing), ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டக் குற்றங்களை அதிகப்படுத்தும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு, இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தக் கூடாது என்றும், இதற்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது. மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் (IT Act) ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் அரசு கேள்வி எழுப்பியிருந்தது.

    இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க மெட்டா நிறுவனம் கூடுதல் அவகாசம் கோரியதையடுத்து, அரசு ஜூலை 9 வரை காலக்கெடுவை நீட்டித்திருந்தது.  அரசுடன் விரிவான ஆலோசனைகள் முடியும் வரை, இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று மெட்டா நிறுவனம் ஏற்கனவே உறுதியளித்துள்ளது. ஆனால் தற்போதுவரை இதுகுறித்து மெட்டா நிறுவனம் பதிலளிக்கவில்லை.

    அரசுடனான ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான விளக்கங்கள் குறித்த ஆவணங்களை மெட்டா நிறுவனம் முறையாகச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வாட்ஸ்அப் மட்டுமல்லாது டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற பிற செயலிகளிடமும் அவற்றின் யுசர்நேம் வசதிகள் குறித்து அரசு விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Meta Misses Govt Deadline username whatsapp WhatsApp Usernames Feature
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசீனாவையே சார்ந்திருக்கும் இந்தியா –  எங்கே போனது மோடியின் தன்னிறைவு இந்தியா?  – காங்கிரஸ் கேள்வி
    Next Article ஆழ்கடலில் நிலையான மீன்பிடிப்புக்கான தேசிய திட்டம் ; துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
    Editor web3
    • Website

    Related Posts

    ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”

    July 9, 2026

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    July 9, 2026

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    ஃபிஃபா2026 : “வெய்ன் ரூனி, நீங்க படகோட்டச் செல்லலாம்! ” – நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் காமெடி

    காவிரி நீரை மறுப்பது உச்சநீதிமன்ற அவமதிப்பு… கர்நாடகாவுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.