Close Menu
    What's Hot

    ஆப்பில் ₹150… கேட்டது ₹300!… அராஜக ஓலா ஆட்டோ ஓட்டுநரிடம் பெண் ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    அதிமுகவினர் – சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் இடையே மோதல் – விழுப்புரத்தில் பரபரப்பு

    தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் நியமனத்துக்கான தேடல்குழு – அரசு அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கட்டுமானப் பொருட்கள் விலை தாறுமாறு உயர்வு..!! எம்.சாண்ட் ஏற்றுமதிக்கு தமிழக அரசு வைத்த செக்..!!
    Featured

    கட்டுமானப் பொருட்கள் விலை தாறுமாறு உயர்வு..!! எம்.சாண்ட் ஏற்றுமதிக்கு தமிழக அரசு வைத்த செக்..!!

    editor5By editor5July 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 24 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் கட்டுமானத் துறையை பாதிக்கும் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ள நிலையில், அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு தற்காலிக தடை விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கட்டுமானப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து பொதுமக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு யூனிட் ஜல்லியின் விலை ரூ.4,000லிருந்து ரூ.5,000 ஆகவும், எம்.சாண்ட் ரூ.5,000லிருந்து ரூ.6,000 ஆகவும், பி.சாண்ட் ரூ.6,000லிருந்து ரூ.7,000 ஆகவும் திடீரென அதிகரித்துள்ளது. இந்த உயர்வு வீடு கட்டும் நடுத்தர வர்க்க மக்களை மட்டுமின்றி, கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழிலாளர்களையும் பெரிதும் பாதித்துள்ளது.

    வங்கிக் கடன் மற்றும் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து வீடு கட்டத் தொடங்கிய பலர், தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக பணிகளை நிறுத்தி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கட்டுமானத் தொழில் முடக்கம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்த நிலையை சரிசெய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளது. சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு கருங்கல், பாறை, எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்தும் மற்றும் தற்காலிகமாக தடை விதிக்கும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மாநிலத்திற்குள் போதுமான அளவு கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு நோக்கம் கொண்டுள்ளது. மேலும், சட்டவிரோத கனிம சுரங்கம், அவற்றின் போக்குவரத்து மற்றும் சேமிப்பு தொடர்பான விதிகளில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, சரியான வழியில் கனிமங்களை பயன்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்டுமானத் துறை வல்லுநர்கள், “உள்ளூர் தேவையை முதலில் பூர்த்தி செய்யாமல் ஏற்றுமதி செய்வது தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை உடனடி நிவாரணம் அளிக்கும்” என வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், விலை உயர்வுக்கு முழுமையான தீர்வு காண சுரங்கங்களை அதிகரிப்பது, சட்டப்பூர்வமான சுரங்க நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட நீண்டகால திட்டங்கள் தேவை என்கின்றனர்.

    தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சற்று தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த அரசுக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    m sand TN Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநிலப் பொறுப்பு கேட்ட சி.வி.சண்முகம்.. முடிவு எடுக்க தயங்கும் தவெக தலைமை! நடக்கப்போவது என்ன..??
    Next Article தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்: இயக்குநர் சேரன் போட்டி!
    editor5

    Related Posts

    ஆப்பில் ₹150… கேட்டது ₹300!… அராஜக ஓலா ஆட்டோ ஓட்டுநரிடம் பெண் ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    July 11, 2026

    அதிமுகவினர் – சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் இடையே மோதல் – விழுப்புரத்தில் பரபரப்பு

    July 11, 2026

    தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் நியமனத்துக்கான தேடல்குழு – அரசு அறிவிப்பு

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்பில் ₹150… கேட்டது ₹300!… அராஜக ஓலா ஆட்டோ ஓட்டுநரிடம் பெண் ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    அதிமுகவினர் – சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் இடையே மோதல் – விழுப்புரத்தில் பரபரப்பு

    தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் நியமனத்துக்கான தேடல்குழு – அரசு அறிவிப்பு

    சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. விஜயிடம் அன்புமணி வலியுறுத்தல்..!!

    நேட்டோ உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கு ரிவால்வர்;  துருக்கி அதிபர் எர்டோகன் பரிசால்  சர்ச்சை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.