தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகுகளுக்கு மேல் முன்னிலை பிடித்து வெற்றியை உறுதி செய்து வருகிறது.

புதிதாக கட்சியை தொடங்கிய விஜய் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே பெருவாரியான கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கும் வகையில்110 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலையில் இருப்பது தமிழ்நாட்டின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் விஜய், ஆட்சி அமைப்பார் என்னும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் விஜய்க்கு அவர் சார்ந்துள்ள திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விக்ரம் :-

வாழ்த்துகள் தோழா,  நீங்கள் இன்று வரலாற்றை உருவாக்கி இருக்கிறீர்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் :-
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள். நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார்

நடிகர் ரவிமோகன்:

அண்ணா, அதிகாரத்தை கொடுக்கலாம்.. ஆனால் மரியாதையை சம்பாதிக்க வேண்டும். நீயோ இரண்டையும் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டவன். இது வெறும் வெற்றி அல்ல, நம்பிக்கையால் முத்திரை குத்தப்பட்ட ஒரு புரட்சி. நாங்கள் எப்போதும் உன்னோடு.

சில நாட்களுக்கு முன் நம்முடைய கடைசி சந்திப்பில் நீ சொன்ன வார்த்தைகள், “Worry பண்ணாதே பா, நல்லதே நடக்கும்” — அந்த நாளே எனக்கும் என் குடும்பத்துக்கும் நீ வென்ற நாள்.முன்னேறு அண்ணா.. எதிர்காலம் ஏற்கனவே உன் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறது. உனக்கு எப்போதும் நிபந்தனையற்ற அன்பு.

ஆர்.ஜே. பாலாஜி :-

Wow..!!! This is HISTORIC…!!!  மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…!  Congratulations Vijay sir and to the people of our wonderful state Tamil nadu ..!!!

நடிகர் அருண்விஜய்:-
மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் …தனியே நின்று களத்தில் வெற்றி பெற்ற தவெகவினருக்கு எனது வாழ்த்துக்கள்.. முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இது மக்களின் வெற்றி!!!

நடிகர் வைபவ் தனது இன்ஸ்டா பதிவில் முதலமைச்சர் விஜய் அண்ணாவின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடிகர் விஷால் உள்பட பல்வேறு நடிகர்களும் கலைத்துறையினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version