வெக அரசும் அதன் தலைமையும் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்”  என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட திரு. ராஜ்மோகன் அவர்களே!

நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது. “அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது.

வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் தவெக  அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்!” எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version