தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதற்காக தவெகவுக்கு நன்றி என்றும் எனது பொறுப்பை நான் செவ்வனே செய்வேன், தவெகவுக்கு பீரங்கியாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் அவ்வாறு பேசினால் கைது செய்யாமல் என்ன செய்வார்கள்? சம்பந்தமில்லாத நடிகையை பற்றி பேசுகிறார்கள் என்றார்.
மேலும் பேசுவதை பேசிவிட்டு காவிரியை கூறினேன் என குறிப்பிடுகிறார் உதயநிதி என்றும் காவிரி தாயையும் அசிங்கப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் பேசுவது நன்றாக இல்லை என்ற அவர் சட்டசபையிலும் பெண்கள் அதிகம் உள்ளார்கள் அங்கு விட்டால் அங்கும் அப்படி தான் பேசுவார்கள் என்றார்.
திமுகவினருக்கு தோற்ற வெறி அடங்கவில்லை என விமர்சித்த புகழேந்தி, தமிழக முதல்வரை வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் தான் கூறுகிறார். அப்படி என்றால் திமுகவினரால் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரை எதிர்த்து பேச முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
த்ரிஷா ஒரு நடிகை அவர் அவரது வேலையை பார்த்து கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவரது அப்பாவிடம் போய் எவ்வாறு பேச வேண்டும் என கேட்க சொல்லுங்கள் இறந்தவரை கூட அவதூறாக பேசாதவர் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார்.
சட்டம் அதன் கடமையை செய்கிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது தான் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது இனிமேல் இது போன்று நடவடிக்கைகள் தான் பாயும் எனக் கூறினார்.
