முதலமைச்சர் விஜய் “இரவல் ஆட்சி நடத்துகிறார்” என்றும், “இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்த நிலையில், அதற்கு தவெக ஐ.டி. பிரிவு கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

தவெக ஐ.டி. பிரிவு, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கட்சி நடக்கிறதா, கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர், ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது” என்று விமர்சித்துள்ளது.

மேலும், “திமுகவுடன் சேர்ந்து கூட்டுக் களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர், மனசாட்சி உள்ள மக்களாட்சியை ‘இரவல் ஆட்சி’ என்று கூறுவது அடக்க முடியாத சிரிப்பை வரவழைக்கிறது” என்றும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், “கொடநாடு கொலை வழக்கு பற்றி பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம், தவெக அரசு குறித்து குறைகூறுவது குபீர் சிரிப்பை ஏற்படுத்தும் காமெடி” என்றும் தவெக ஐ.டி. பிரிவு தாக்கியுள்ளது.

இறுதியாக, “அதிமுகவே துண்டு துண்டாக சிதறி வரும் நிலையை உணராமல் தொடர்ந்து காமெடியாக பேட்டி கொடுப்பதை விட, முதலில் தனது கட்சியை காப்பாற்றும் பணியில் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்த வேண்டும்” என்றும் தவெக ஐ.டி. பிரிவு பதிலடி கொடுத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version