தமிழ்நாட்டில் ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறந்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ள விஜய் அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார்.

தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான பாலாறு, காவேரி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர், விவசாயம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தமிழ்நாடே பாலைவனமாக மாறிவிடும் என்பதால்

2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 -ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் , ஆற்று மணலுக்கு பதிலாக கட்டுமான பணிகளுக்கு குவாரி மணல் ( M sand ) பயன்படுத்த வேண்டுமென்றும்,

தமிழ்நாட்டு ஆறுகளில் முழுமையாக ஆற்று மணல் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் தான் பொதுநல வழக்கு தொடர்ந்ததாகவும்,

அந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர், 2017 ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி, அன்றைய தமிழக தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அரசு செயலர்கள் கொள்கை முடிவுவெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததாகவும்,

அதன் அடிப்படையில் தொடர்ந்து 2026 வரை ஆட்சியில் இருந்த அரசுகளும் எடுத்த தொடர் நடவடிக்கையின் பயனாக தற்போது ஆற்று மணல் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர், உங்கள் நண்பர் கனிம வள வழக்கில் தொடர்புடைய ஜனார்த்தன ரெட்டி (Gali Janarthana Retty ) அவர்களுக்காக தமிழ்நாட்டின் ஆறுகளில் மணல் எடுக்க உத்தரவிட்டுள்ளீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் அணு கனிம மணல் எடுக்க ஓராண்டு நீட்டித்து உத்தரவிட்டது போல் தமிழக ஆற்றுமணலையும் கொள்கை அடிக்க முயற்சிப்பதா ?

ஏற்கனவே தமிழக விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்து ஏமாற்றியது நினைவிருக்கிறதா ? காவேரி தண்ணீரையும் தமிழக விவசாயிகளுக்கு பெற்று கொடுக்க எந்த முயற்சியிலும் ஈடுபடாத தாங்கள் ஆற்று மணலையும் அள்ளி விவசாயிகளை தற்கொலைக்கு தள்ள துணிந்து விட்டீர்களா? எனச் சாடியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version