மேகதாது அணை பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அடகு வைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிந்துரைத்துள்ளார்.
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருப்பதாக தனது எக்ஸ்தளப் பதிவில் உதயநிதி தெரிவித்துள்ளார்.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் – ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர் எனச் சாடியுள்ள அவர்,
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தாகக் குறிப்பிட்டு,
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை, விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை என காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும் என அச்சம் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
