திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலமாக தவெகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
கரூர் அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் எனக் கூறியுள்ள உதயநிதி,
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுவதாக விமர்சித்துள்ளார்.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் எனக் குற்றம்சாட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின்,
“தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன் என வினா எழுப்பியுள்ளார்.
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
