மிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்,  3 நாட்கள் பயணமாக நாளை, புதன்கிழமை தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக கடந்த மே மாதம் 27 ம்தேதி டெல்லி  சென்றார்.  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டும் சந்தித்து விட்டு, மறுநாள்  சென்னை திரும்பி விட்டார்.

இந்த நிலையில் டெல்லியில் வரும் 11 ம் தேதி வியாழக்கிழமை, நிதி ஆயோக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும், பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, 3 நாட்கள் பயணமாக, நாளை 10 ம் தேதி, புதன்கிழமை காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து தனி விமானத்தில், டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

கடந்த டெல்லி பயணத்தின்போது சந்தித்து பேசாத ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை இம்முறை, முதலமைச்சர் சந்தித்துப் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே, முதலமைச்சர் தனது பயணத்தை, 3 நாட்கள் பயணமாக, அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் 3 நாட்கள் பயணத்தை நிறைவு செய்துவிட்டு, வருகின்ற 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, மாலை 6 மணி அளவில், சென்னைக்கு திரும்பி வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version