Close Menu
    What's Hot

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முடிவுக்கு வரும் போர் பதற்றம்!. இன்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டிரம்ப்!
    Featured

    முடிவுக்கு வரும் போர் பதற்றம்!. இன்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டிரம்ப்!

    Editor web3By Editor web3June 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trump warning
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய கடல் வழியாக விளங்கும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’  உடனடியாக திறக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். பல வாரங்களாக நிலவி வந்த மோதலால் இந்த வழித்தடம் மூடப்பட்டு சர்வதேச கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு உலக நாடுகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

    இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரானுடனான நமது உறவு முந்தைய காலங்களை விட இப்போது மிகவும் சிறப்பாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. அவர்கள் இனி அணு ஆயுதங்களை விரும்பவில்லை, அதைப் பெறவும் மாட்டார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப் பேசிய டிரம்ப், “நிலைமை முழுமையாக சீரடைந்தவுடன், அங்குள்ள அணுசக்தி கழிவுகளை அமெரிக்கா கைப்பற்றி அழிக்கும்,” எனத் தெரிவித்தார். மேலும், “இந்த அமைதி பேச்சுவார்த்தைகள் விரைவாகவும் சீராகவும் நடக்கும் என நம்புகிறேன். ஒருவேளை இதில் எதுவும் சரியாக வரவில்லை என்றால், எங்களிடம் ‘இறுதியான மாற்றுத் திட்டமும் தயாராக உள்ளது; ஆனால், அதை பயன்படுத்தும் நிலை ஒருபோதும் வராது என நம்புகிறேன்,” என்று எச்சரிக்கை கலந்த தொனியில் அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்று வரும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. எனினும், ஒப்பந்தம் கையெழுத்தாகும் சரியான நேரம் குறித்து ஈரான் தரப்பில் இன்னும் சில ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    iran war peace agreement today Trump to sign War Tensions
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகளிர் டி20 உலகக்கோப்பை! வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? இன்று பாகிஸ்தானுடன் மோதல்!
    Next Article முதல் ODI போட்டி| ஆப்கானை துவம்சம் செய்தது இந்தியா! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
    Editor web3
    • Website

    Related Posts

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    July 30, 2026

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    July 30, 2026

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.