சென்னையில் இன்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, என் ஆனந்த், வெங்கட்ராமன் மற்றும் தலைமைச் செயலர் சாய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் இறுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேடையில் பேசினார், அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் விளையாட்டு துறை எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும், நம்முடைய ஆட்சியில் விளையாட்டு துறையையும் விளையாட்டு வீரர்களையும் முன்னேற்றுவோம்.
அனைவரும் நன்றாக விளையாட வேண்டும், விளையாடினால்தான் வலிமையாக இருக்கும். இனிமேல் நாம் விளையாடுவதுதான் நம்முடைய பாடத்திட்டமாகவும் இருக்கும்.
இந்திய வரலாற்றிலேயே 3 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் யாருமே இல்லை நம்முடைய முதலமைச்சர் தான். காலையில் சீக்கிரமே எழுந்து மக்களோடு மக்களாக மாரத்தான் ஓடி இருக்கிறார், அதுவும் நிறுத்தாமல் ஓடி இருக்கிறார்.
இனிமேல் விளையாட்டுத்துறையில் எந்த ஒரு குறைபாடுகளும் இருக்காது, இன்னும் ஒரு வருடத்தில் எங்கு பார்த்தாலும் மைதானம்தான் இருக்க போகிறது. அதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம்.
மாரத்தான் ஓடி வந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் நடந்து வந்தவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். முழுமையாக ஆறு கிலோமீட்டர் ஓடுபவர்கள் தான் உடல் வலிமையோடு இருப்பார்கள். அதனால் எப்படியாவது ஆறு கிலோ மீட்டர் ஓடுவதற்கு முயற்சி செய்யுங்கள்” என்றார்.

