Close Menu
    What's Hot

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கோவா நைட் கிளப்பில் பயங்கர தீ விபத்து… 23 பேர் உடல் கருகி பலி
    இந்தியா

    கோவா நைட் கிளப்பில் பயங்கர தீ விபத்து… 23 பேர் உடல் கருகி பலி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025Updated:December 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    firee
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடக்கு கோவாவில் உள்ள அப்போரா பகுதியில் அமைந்துள்ள கடற்கரையோர நைட் கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். விடுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் மாநிலங்களில் ஒன்று கோவா. அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ள இந்த மாநிலத்தில் போர்ச்சுகல் பாரம்பரிய கட்டிடங்கள், கோட்டைகள், தேவாலயங்கள் மற்றும் இயற்கை எழிலுடன் கூடிய பல்வேறு கடற்கரை பகுதிகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவது வழக்கம்.

    இந்த கடற்கரையோர பகுதிகளில் தங்கும் விடுதிகள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் அதிகம் அமைந்துள்ளன. நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம் சீசன் டைம் என உள்ளூர் மக்கள் சொல்வதுண்டு. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நாட்கள் இதில் அடங்கும்.

    இந்நிலையில், சனிக்கிழமை (டிச.6) நள்ளிரவு வடக்கு கோவாவின் அப்போரா பகுதியில் அமைந்துள்ள இரவு நேர விடுதி ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தம் 3 பெண்கள் உட்பட 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விடுதியில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களில் 3 முதல் 4 பேர் சுற்றுலா பயணிகள் என்றும், மற்றவர்கள் விடுதியின் சமையலறையில் பணியில் இருந்தவர்கள் என்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். 20 பேர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.

    காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த விடுதியில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என கண்டறிந்துள்ளனர்.

    இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து விடுதிகளிலும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்ற படுகிறதா என்பதை தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபா வலியுறுத்தி உள்ளார்.

    பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்: கோவா இரவு நேர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்த தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

    கோவா இரவு நேர விடுதியில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாமகவை பறிக்க நடந்த சதி திட்டம் முறியடிப்பு… அன்புமணி மீது ராமதாஸ் தாக்கு
    Next Article ஆஸ்திரேலிய அதிரடியில் நொறுங்கியது இங்கிலாந்து பவுலிங்!
    Editor TN Talks

    Related Posts

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    July 17, 2026

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    July 17, 2026

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.