Close Menu
    What's Hot

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    சிதம்பரம்: மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»பாமகவை பறிக்க நடந்த சதி திட்டம் முறியடிப்பு… அன்புமணி மீது ராமதாஸ் தாக்கு
    அரசியல்

    பாமகவை பறிக்க நடந்த சதி திட்டம் முறியடிப்பு… அன்புமணி மீது ராமதாஸ் தாக்கு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025Updated:December 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Anbumani Ramadoss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமகவை பறிக்க நடந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    நான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 04.12.2025 அன்று நடந்த விசாரணையில் இன்று 06.12.2025  தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் நான் தொடர்ந்த வழக்கில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. மருத்துவர் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது. அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி என்று சொல்லுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

    பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் இல்லாததால், தேவை ஏற்படின் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.28.05.2022 முதல் 28.05.2025 வரை மூன்றாண்டு காலம் தலைவர் பதவி என்பதற்கு மாறாக, ஒரு போலி ஆவணத்தை (கடிதம்) தயாரித்து 2023 முதல் 2026 வரை என்று தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி கொடுத்த போலி கடிதத்தை ஏற்று தேர்தல் ஆணையம் அன்புமணி தலைவர் என்று அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.

    எனவே நான் 46 ஆண்டு காலம் உழைத்து 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இயக்கத்தை வளர்த்து மருத்துவர் அன்புமணியை மத்திய அமைச்சராக மேலும் பலரை மத்திய அமைச்சர்களாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெற செய்த என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் என்னிடமிருந்து கட்சியையும், கட்சி தொண்டர்களையும், நாட்டு மக்களையும் பிரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்.

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதி வென்றுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏழை பெண்களுக்கு ரூ.51,000 திருமண உதவி திட்டம்: ஒடிசா அரசு ஒப்புதல்
    Next Article கோவா நைட் கிளப்பில் பயங்கர தீ விபத்து… 23 பேர் உடல் கருகி பலி
    Editor TN Talks

    Related Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    ” ம.பொ.சி., சிவாஜி கட்சி கதிதான்… மதிமுக விரைவில் காணாமல் போகும்”

    July 17, 2026

    கோவை செம்மொழிப் பூங்கா ஊழல்; கடந்த ஆட்சியின் தவறு –  கே.ஏ.செங்கோட்டையன்

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    சிதம்பரம்: மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    பழனி கோவில் நில சர்ச்சை: சேதுபதி வீட்டில் இறங்கிய சிபிசிஐடி.. தலைமறைவானவருக்கு வலை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.