அரபிக்கடலில் இன்று காலை 5:30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கக்கூடிய நிலையில் அடுத்த ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.