விமான விபத்தில் நேற்று (புதன்) உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் உடல், இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் நேற்று காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் அஜித்பவார் மற்றும் அவருடன் பயணித்த விமானி கேப்டன் சுமித் கபூர், பெண் துணை விமானி கேப்டன் சாம்பவி பதக், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, மும்பை போலீசைச் சேர்ந்த அஜித்பவாரின் பாதுகாப்பு அதிகாரி விபித் ஜாதவ் உள்ளிட்டோர் மரணமடைந்தனர்.

இதனையடுத்து அவர்களின் உடல்கள் அஹில்யாபாய் ஹோல்கர் அரசு மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனை நடந்தது. இதன் பிறகு அஜித்பவாரின் உடல் மருத்துவமனையிலிருந்து காட்டேவாடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் இன்று காலை வீட்டில் இருந்து அவரது உடல் தேசிய கொடி போர்த்தப்பட்டு, ஊர்வலமாக வித்யா பிரதிஸ்தான் திடலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வழிநெடுங்கிலும் சாலையில் இருபுறங்களிலும் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அஜித்பவாருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.

வித்யா பிரதிஸ்தான் திடலில் இன்று பகல் 12 மணியளவில் அஜித் பவாரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதன் பின்னர் முழு அரசு மரியாதையுடன் அஜித்பவாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் அஜித்பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத்பவார், மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, நிதின்கட்கரி, பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version