காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம் மற்றும் நீர்த்திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிக்க: இனி இந்தியாவின் பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்- பிரதமர் மோடி
கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீர், ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டுமென கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.