முக்கியம் இல்லாத வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி முறையிடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
முக்கியம் இல்லாத வழக்குகளை விரைந்து விசாரிக்கக்கோரி முறையிடும் வழக்கம் அதிகரித்து வருவதால், உச்சநீதிமன்றம் அதிருப்தியில் இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, அவசரமாக விசாரிக்க கோரி முறையிட்ட வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி கடிந்து கொண்டார்.
அப்போது அவர், முக்கியம் இல்லாத வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி முறையிடுவது தெரியவந்தால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.
அபராதம் 50 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் அபராத தொகை இளம் வழக்கறிஞர்களுக்கான பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
