Close Menu
    What's Hot

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»புதுச்சேரி அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் பாஜகவில் இணைகிறார்!
    இந்தியா

    புதுச்சேரி அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் பாஜகவில் இணைகிறார்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025Updated:November 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bjp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவில் இருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், பாஜகவில் இணையவுள்ளார். அக்கட்சியின் புதுச்சேரி மேலிட பொறுப்பாளரை இன்று அவர் சந்தித்தார்.

    புதுவை மாநில அதிமுகவில் புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர். கடந்த 2011-16, 2016-21-ம் ஆண்டுகளில் முதலியார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார்.

    கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். புதுச்சேரி மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகனின் தம்பியான இவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு இரு தினங்களுக்கு முன் கடிதம் அனுப்பினார்.

    ஏற்கெனவே முன்னாள் எம்எல்ஏ அசனா அதிமுகவில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து இவரும் விலகினார். இதில், அசனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார். இதே போல் பாஸ்கர் வேறு ஒரு கட்சியில் இணைய இருப்பதாக பேசப்பட்டது.

    இந்நிலையில், இன்று புதுச்சேரி வந்த பாஜக மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை, பாஜக மாநிலத்தலைவர் வி.பி.ராமலிங்கத்துடன் சென்று பாஸ்கர் சந்தித்தார்.

    பாஜக தரப்பில், ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்று தெரிவித்தனர் அதே நேரத்தில் பாஸ்கர் தரப்போ, விரைவில் அவர் பாஜகவில் இணையவுள்ளதாகவும், முதலியார்பேட்டை தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை உறுதி செய்யவும் பாஜகவிடம் அவர் கோரியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநில சட்ட மசோதாக்களை கிடப்பில் வைக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !!!
    Next Article “எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகளுக்கு வாய்ப்பு” – கிருஷ்ணசாமி கருத்து
    Editor TN Talks

    Related Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    August 5, 2026

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    August 5, 2026

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    ரூ.2,500 எதிர்பார்ப்பு; கிடைப்பது ரூ.1,000? மகளிர் திட்டம் குறித்து எழுந்த கேள்விகள்.. அப்செட்டில் பெண்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.