Close Menu
    What's Hot

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    காமராஜரை சொந்தம் கொண்டாடும் தவெக.. இது பொருத்தமில்ல..!! ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மாநில சட்ட மசோதாக்களை கிடப்பில் வைக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !!!
    அரசியல்

    மாநில சட்ட மசோதாக்களை கிடப்பில் வைக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025Updated:November 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Picsart 25 11 20 16 31 52 482
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதா கலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ஆர் ரவி நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்தார். இது சம்பந்தமாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு தொடரப்பட்டது.

    தமிழக அரசு கொடுத்த அந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன், “சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் அவற்றை கிடப்பில் போட்டுவிட்டு, பின்னர் குடியரசு தலைவருக்கு அந்த சட்ட மசோதாக்களை பரிந்துரை செய்த விஷயம் சட்டவிரோதமானது. அதுமட்டுமின்றி சட்டப்பேரவையில் மறு நிறைவேற்றும் செய்து அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும் குடியரசுத் தலைவர் மூன்று மாதத்திலும் முடிவு எடுத்தாக வேண்டும்”, என்ற காலக்கெடுவையும் நிர்ணயத்தினர்.

    உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 13ஆம் தேதி, இந்த விவகாரம் தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 143ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திற்கு 14 எதிர் கேள்விகளை எழுப்பி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

    குடியரசுத் தலைவர் எழுப்பிய இந்த கேள்விக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பி ஆர் கவாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் முடிவாக இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

    அந்தத் தீர்ப்பில், “ மாநில சட்ட மசோதாக்களின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு எந்தவித காலக்கெடுவையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது. ஒருவேளை ஆளுநர் சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் கிடப்பில் வைத்திருந்தால்,  அது சம்பந்தமாக மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழக அரசு தொடரப்பட்ட வழக்கில், ஆளுநர் மீதும் குடியரசு தலைவர் மீதும் காலக்கெடு விதித்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

    சட்ட மசோதாக்களை ஆளுநர் காரணமே இல்லாமல் கிடப்பில் வைத்திருந்தால், அது சம்பந்தமாக மாநில அரசு உச்ச நீதிமன்றத்திலும் கேள்வி எழுப்பலாம். இருப்பினும் அவ்வாறு ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கும் பட்சத்தில் ஆளுநருக்கு எதிராக எந்தவித உத்தரவையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது. மாநில சட்ட மசோதாக்களை ஆளுநர் ஒன்று நிறைவேற்ற வேண்டும் இல்லை நிராகரிக்க வேண்டும். மூன்றாவதாக திரும்ப மாநில அரசுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். அதேசமயம் மசோதாவை கால வரமின்றி கிடப்பில் வைத்திருக்க ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.

    அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் மாநிலத்தை முழுமையாக வழி நடத்தி செல்லக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை ஏற்க முடியாது”, இவ்வாறு குடியரசு தலைவர் எழுப்பிய அந்த கடிதத்திற்கு உச்ச நீதிமன்றம் சார்பில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    Governor india supreme court tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமிக மோசத்தில் இருந்து கடுமையான நிலைக்குச் சென்ற டெல்லியின் காற்று தரம்; சோகத்தில் மக்கள் !!!
    Next Article புதுச்சேரி அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் பாஜகவில் இணைகிறார்!
    Editor TN Talks

    Related Posts

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    July 15, 2026

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    July 15, 2026

    காமராஜரை சொந்தம் கொண்டாடும் தவெக.. இது பொருத்தமில்ல..!! ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    காமராஜரை சொந்தம் கொண்டாடும் தவெக.. இது பொருத்தமில்ல..!! ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!!

    தமிழகத்துக்கு மேலும் 150 எம்பிபிஎஸ் இடங்கள்… மருத்துவக் கல்வியில் தொடர்ந்து முன்னிலை!

    தலைமைச் செயலாளருக்கு பதவி நீட்டிப்பு!. மேலும் 6 மாதங்கள் தொடர்கிறார் சாய் குமார் ஐஏஎஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.