உத்தரபிரதேசத்தில் மனைவி தகாத உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தியோரியா பிரசித்நகர் கிராமத்தை சேர்ந்தவர் கில்வான். விவசாயியான அவர், அரியானா மாநிலம் ஷாஹாபாத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கில்வானின் மனைவி, அதேப் பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தாக தெரிகிறது. இந்த விஷயம் கில்வானுக்கு தெரியவர, இது குறித்து மனைவியை கண்டித்துள்ளார். ஆயினும் அதனை கண்டுகொள்ளாத அவர், கள்ளக் காதலை வளர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவியை தாக்கியதோடு, அவரது மூக்கை கடித்து துப்பிவிட்டு தப்பியோடியுள்ளார். வலியால் அப்பெண் கதறிய நிலையில், சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பெண்ணை மீட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மூக்கை மீண்டும் இணைக்க அறுவை சிகிச்சை முயற்சிகள் நடைபெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கில்வானை தேடி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version