சஞ்சார் சாத்தி செயலியை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், அதைச் செயல்படுத்துங்கள். நீங்கள் விரும்பவில்லை என்றால், அதைச் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை. அது கட்டாயமில்லை” என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கமளித்துள்ளார்.

சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், புதிதாக விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) என்ற செயலியை முன்கூட்டியே (Pre-install) நிறுவுமாறு, தொலைத்தொடர்பு அமைச்சகம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சியின் இந்த செயலி, அரசாங்கம் கண்காணிக்கும் சாதனம் என்று பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளானது.

இந்தநிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கமளித்துள்ளார். இந்த செயலி யாரையும் உளவு பார்க்காது அல்லது அழைப்புகளைக் கண்காணிக்காது என்று கூறியுள்ளார்.”நீங்கள் செயலியைப் பயன்படுத்த விரும்பினால், அதைச் செயல்படுத்துங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அதைச் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது கட்டாயமில்லை. நீங்கள் விரும்பினால் உங்கள் தொலைபேசியிலிருந்து அதை நீக்கலாம்” என்று சிந்தியா கூறினார்.

மோசடி, ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் குற்றங்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாக இருப்பதால், இந்தச் செயலியை பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார். இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது நமது கடமை. அதை அவர்களின் சாதனங்களில் வைத்திருப்பதா இல்லையா என்பது பயனரைப் பொறுத்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, புதிய மொபைல் போன்களில் “சஞ்சார் சாத்தி” செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவை குற்றம் சாட்டினார், இது “உளவு செயலி” என்றும், அரசாங்கம் நாட்டை சர்வாதிகாரமாக மாற்ற முயற்சிக்கிறது என்றும் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version