Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பயணிகளுக்கு ரூ.10,000 ‘வவுச்சர்’ – இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு
    இந்தியா

    பயணிகளுக்கு ரூ.10,000 ‘வவுச்சர்’ – இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    filght
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விமான சேவை​கள் ரத்​தால் பாதிக்​கப்​பட்ட பயணி​களுக்கு தலா ரூ.10,000 மதிப்​பில் ‘வவுச்​சர்​கள்’ வழங்​கப்​படும். மேலும் மத்​திய அரசின் வழி​காட்​டு​தலின்​படி ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இழப்​பீடும் வழங்​கப்​படும் என்று இண்​டிகோ நிறுவனம் தெரி​வித்​துள்​ளது.

    விமானிகள், ஊழியர்​கள் பற்​றாக்​குறை காரண​மாக கடந்த ஒரு வாரத்​தில் இண்​டிகோ நிறு​வனத்​தின் 4,900 உள்​நாட்​டு, வெளிநாட்டு விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதன்​ காரண​மாக டெல்​லி, மும்​பை, சென்​னை, கொல்​கத்தா உட்பட பல்வேறு விமான நிலை​யங்​களில் ஆயிரக்​கணக்​கான விமான பயணி​கள் பரித​வித்​தனர்.

    இண்​டிகோ விமான சேவை​கள் பாதிப்பு தொடர்​பாக மத்​திய விமான போக்​கு​வரத்​துத் துறை விசா​ரணை நடத்தி வரு​கிறது. முதல் ​கட்​ட​மாக இண்​டிகோ நிறுவன விமான சேவை​களில் 10 சதவீதத்தை குறைக்க மத்​திய அரசு உத்​தர​விட்டு உள்​ளது.

    இந்த சூழலில் விமான பயணி​களிடம் நன்​ம​திப்பை பெற இண்டிகோ நிறு​வனம் பல்​வேறு முயற்​சிகளை மேற்​கொண்டு வருகிறது. ரத்து செய்​யப்​பட்ட 12.5 லட்​சம் பயணச் சீட்​டு​களுக்​காக ரூ.1,158 கோடி பயணி​களுக்கு திருப்பி வழங்​கப்​பட்டு உள்​ளது.

    இதைத் தொடர்ந்து இண்​டிகோ நிறு​வனம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: எங்​களது வாடிக்கையாளர்களின் நலன்​களுக்கு முன்​னுரிமை அளித்து வருகிறோம். ரத்து செய்​யப்​பட்ட பயணச் ​சீட்​டு​களுக்​கான கட்டணம் அவர​வர் வங்​கிக் கணக்​கு​களில் திருப்பி செலுத்தப்பட்டு இருக்​கிறது.

    விமான சேவை ரத்​தால் கடந்த 3, 4, 5-ம் தேதி​களில் பயணி​கள் அதி​கம் பாதிக்​கப்​பட்​டனர். அவர்​களுக்கு தலா ரூ.10,000 மதிப்​பில் ‘வவுச்​சர்​கள்’ வழங்​கப்​படும். இதை பயன்​படுத்தி இண்​டிகோ விமானங்​களில் பயணம் மேற்​கொள்​ளலாம். அடுத்த 12 மாதங்​கள் வரை இந்த ‘வவுச்​சர்​கள்’ செல்​லுபடி​யாகும்.

    ரூ.10,000 இழப்​பீடு: மேலும் மத்​திய அரசின் வழி​காட்​டு​தலின்​படி பாதிக்​கப்​பட்ட பயணி​களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இழப்பீடு வழங்​கப்​படும். விமான சேவை ரத்​து, கால​தாமத நேரம் ஆகிய​வற்றை கருத்​தில் கொண்டு இந்த இழப்​பீடு அளிக்​கப்​படும்.

    பாது​காப்​பான, நம்​பக​மான விமான சேவையை வழங்க இண்டிகோ நிறு​வனம் உறுதி பூண்​டிருக்​கிறது. இவ்​வாறு அறிக்கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுன்னாள் சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு மக்களவையில் மவுன அஞ்சலி
    Next Article திமுகவை மிரட்டும் காங்கிரஸ்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுக்கும் டெல்லி புள்ளிகள்!!
    Editor TN Talks

    Related Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    அமித்ஷாவுடன் சந்திப்பு..!! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை அடுக்கிய அண்ணாமலை..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.