Close Menu
    What's Hot

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகிறது காங்., கட்சி..!! தர்மேந்திர பிரதான் பகீர் குற்றச்சாட்டு..!!

    நாளை நடிகர் சூர்யாவுக்கு ஹேப்பி பர்த்டே..!! முருகன் கோயிலில் வெள்ளித்தேர் இழுத்த ரசிகர்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»முன்னாள் சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு மக்களவையில் மவுன அஞ்சலி
    இந்தியா

    முன்னாள் சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு மக்களவையில் மவுன அஞ்சலி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    makkalavai 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு மக்களைவையில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவை 12மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    நாடாளுமன்ற மக்களவை வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. மக்களவையின் முன்னாள் சபாநாயகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீலின் மறைவு குறித்த முக்கிய அறிவிப்பை அவையில் வெளியிட்டு சபாநாயகர் ஓம் பிர்லா பேசினார். அப்போது அவர், “முன்னாள் சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் மறைந்துவிட்டார் என்பதை இந்த அவைக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மகாராஷ்ட்ராவின் லட்டூர் மக்களவை தொகுதியில் இருந்து 7 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். 1990 முதல் 91 வரை மக்களவை துணை சபாநாயகராகவும், 1991 முதல் 96 வரை மக்களவை சபாநாயகராகவும் திறம்பட பணியாற்றியவர். மக்களவையை அவர் சிறப்பாக வழிநடத்தினார். அவையில் கண்ணியம் காக்கப்பட அவர் பாடுபட்டார். நாடாளுமன்ற நிலைக்குழுக்களை அமைப்பது முதல் பல்வேறு முக்கிய பணிகளை அவர் சிறப்பாக மேற்கொண்டார்.

    2004 முதல் 07 வரை மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்துள்ளார். நாட்டின் உள்துறை அமைச்சராக, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் ஆளுநராக, சண்டிகரின் நிர்வாக அதிகாரியாக அவர் இருந்திருக்கிறார்.

    மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில துணை சபாநாயகராகவும் சபாநாயகராகவும் அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். அவரது மறைவுக்கு இந்த அவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறது.

    கடந்த 2001, டிச. 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன் நினைவு நாள் நாளை வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த அவை அஞ்சலி செலுத்துகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாங்கிரஸில் விரிசலா?. ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்!.
    Next Article பயணிகளுக்கு ரூ.10,000 ‘வவுச்சர்’ – இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    July 22, 2026

    மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகிறது காங்., கட்சி..!! தர்மேந்திர பிரதான் பகீர் குற்றச்சாட்டு..!!

    July 22, 2026

    சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து.. பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு..!! மீட்புப் பணிகள் தீவிரம்!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகிறது காங்., கட்சி..!! தர்மேந்திர பிரதான் பகீர் குற்றச்சாட்டு..!!

    நாளை நடிகர் சூர்யாவுக்கு ஹேப்பி பர்த்டே..!! முருகன் கோயிலில் வெள்ளித்தேர் இழுத்த ரசிகர்கள்..!!

    மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை அமோகம்..!! திருவாரூர் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

    சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து.. பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு..!! மீட்புப் பணிகள் தீவிரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.