மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல்  கருத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் நிலவி வரும் ராணுவ மோதல்கள் எந்தவொரு பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வாக அமையாது என்று அவர் வலியுறுத்தினார். உக்ரைன் மற்றும் ஈரான் விவகாரங்களில் அனைத்து நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை எட்ட முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்புடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் பின்லாந்தும் சட்டத்தின் ஆட்சி, உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நீண்டகால அமைதி முயற்சிகளுக்கு இரு நாடுகளும் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஈரான் மோதலை நிறுத்தவேண்டும். மோதல்களை ராணுவ நடவடிக்கைக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்.  பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்கவேண்டும். உக்ரைனாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து ஆதரப்போம். உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்களை கொண்டுவருவது அவசியமாகும். இதனை விரைவில் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version