விமானப் பயணத்தின் போது பயணிகள் பவர் பேங்குகளைப் பயன்படுத்த தடை விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானத்தில் பவர் பேங்க் கொண்டு செல்லலாம், ஆனால் விமானத்திற்குள் அதைப் பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அனுமதி இல்லை. லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்குகள் விமானத்தின் உள்ளே தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பவர் பேங்குகளை செக்-இன் லக்கேஜ்களில் வைக்க அனுமதி கிடையாது. அவற்றை பயணிகள் தங்கள் கையோடு வைத்திருக்கும் கேபின் பேக்குகளில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். விமானம் பறக்கும் போது அவற்றை எலக்ட்ரானிக் சாதனங்களுடன் இணைப்பதோ அல்லது பயன்படுத்துவதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால், விமானப் பாதுகாப்பு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version