தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழாவில் பங்கேற்க, புதுக்கோட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வருகிறார். இதனை தொடர்ந்து, கூட்டணி, தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், புதுக்கோட்டை வருகை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர்.

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது. இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்ற உள்ளதாக கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version