வேலூா் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய விஜய், லஞ்சம், ஊழல் உள்ளிட்டவை முதல்வரின் நண்பர்கள். மாதம், மாதம் கரெண்ட் பில் கட்டும்படி செய்வதாக சொன்னீர்களே செஞ்சீங்களா. மலை கிராமங்களில் பேருந்து வசதி, மருத்துவமனை வசதி இல்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு we safe model இல்லை We are not safe model. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு காணாமல் போய் பல நாட்கள் ஆனது.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தவெக ஆட்சியில் முதல்பணியாக இருக்கும், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். மாவட்ட எஸ்.பி ஆட்சியர் சரிபாதியாக தமிழ்நாட்டில் நியமிக்கப்படுவார்கள். மலை கிராமங்களில் கல்வி, மருத்துவம் முழுமையாக வழங்கப்படும். திமுக கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி. நடைப்பெற போவது விசில் புரட்சி எலக்ஷன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும் ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்துக்கொள்வதாக விமர்சித்தார். கொள்ளையடித்த பணத்தை வைத்து கல்லாப்பெட்டி கூட்டணியை ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாகவும் சாடிய அவர், அரத பழைய கூட்டணி கணக்குகளோ கொள்ளையடித்த பணத்தையோ வைத்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது எனவும் கூறியுள்ளார்.
மேலும், தான் எதாவது பேசினால், Wantedஆக வண்டியில் சிலர் ஏறி உட்கார்ந்துகொண்டு குரல் கொடுப்பதாக விஜய் பேசியுள்ளார். திமுகவுக்கும் தவெகவுக்கும் சீரியஸாக போட்டி நடக்கும்போது காமெரிக்கு இடமில்லை என கிண்டலடித்தார். இதன்மூலம் திமுக மட்டுமே தனது எதிரி எனவும், பிறர் காமெரி செய்வதாக அதிமுகவை தான் அவர் மறைமுகமாக சொல்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

