வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் கொல்லமங்கலம் பகுதியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, மக்களை நேரடியாக சந்திக்க விடாமல் தன்னை தடுக்க சதி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு. தூயசக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் தான் இங்கு போட்டியே. இதில் இன்னொரு காமெடி வேற. அவருடைய ஆட்சியில் தான் தமிழ்நாடு சூப்பர்ஸ்டார் மாநிலமாக உள்ளதாம்.
ஆம், காமராஜர், அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அப்படி தான் இருந்தது. ஆனால், இன்று ஒன்றுக்கும் உதவாத உல்டா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டேண்டர்ட்-அப் காமெடிக்காரர் வழிநடத்தும் மாநிலமாக உள்ளது. வருகிற தடைகளை எல்லாம் மீறி மக்களுக்காக இந்த தேர்தலில் தவெக தில்லாக நிற்கிறது. வழக்காமாக நடைபெறும் தேர்தலாக இதனை கருதாமல், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிசயமாக நடைபெறும் தேர்தலாக இதை கருதுங்கள்.
என் மீது அவதூறு பரப்பினால் மக்கள் மீது பரப்புவது போன்று, எனக்கு அரசியல் தெரியவில்லை என்றால் மக்களுக்கு தெரியவில்லை என்று சொல்வது போன்று. என்ன அசிங்மாக பேசினால் மக்களை அசிங்கமா பேசுவது போன்று. எனக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிராக செய்வது என அவர்களுக்கு தெரியவில்லை.
விஜய்யும் மக்களும் வேறுவேறு அல்ல. விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி, உடலும் உயிரும் மாதிரி. ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. சென்சிட்டிவான செண்டிமெண்ட் அது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வாதிகள் அரசியலுக்கு வருவதற்கும் முன் எவ்வளவு சொத்து இருந்தது, இப்போது எவ்வளவு உள்ளது.
