தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது 30 வேட்பாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், புதுச்சேரியின் அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். லாஸ்பேட்டை முதல் ஏனாம் வரை பரவியுள்ள இந்த வேட்பாளர் பட்டியலில், பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இதில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் மங்கலம் தொகுதியில் சத்யா மற்றும் கதிர்காமம் தொகுதியில் ஜெயந்தி என வெறும் இரண்டு பெண்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வேட்பாளர் எண்ணிக்கையில் வெறும் 6% மட்டுமே ஆகும். கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் மகளிர் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரப் பகிர்வு மற்றும் சம உரிமை குறித்துத் தொடர்ந்து பேசி வரும் விஜய், நடைமுறை அரசியலில் பெண்களுக்கு மிகக் குறைந்த இடத்தையே ஒதுக்கியுள்ளது அரசியல் விமர்சகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி தவெக வேட்பாளர்கள்:

லாஸ்பேட்டை – சாமிநாதன்
காரைக்கால் தெற்கு – அசனா
நெட்டப்பாக்கம் ( தனி ) – பெரியசாமி
திருபுவனை ( தனி ) – சாய் ஜே.சரவணன்குமார்
முத்தியால்பேட்டை – பிரகாஷ் குமார்
பாகூர் – தனவேலு
ராஜ்பவன் – சந்திரன்
உப்பளம் – சிவா
உழவர்கரை – சசிபாலன்
அரியாங்குப்பம் – குமரவேலு
மணவெளி – இராமு
வில்லியனூர் – ரமேஷ்
முதலியார்பேட்டை – மணிபாலன்
மண்ணாடிப்பட்டு – பாரதிதாசன்
உருளையன்பேட்டை – மரிய பிரான்சிஸ்
மங்கலம் – சத்யா
காமராஜ்நகர் – சுமன்
நெல்லித்தோப்பு – விக்னேஷ்வரன்
காலாப்பட்டு – சசிக்குமார்
இந்திரா நகர் – முருகன்
கதிர்காமம் – ஜெயந்தி
ஊசுடு ( தனி ) – சரகணபவா
தட்டாஞ்சாவடி – பன்னீர்செல்வம்
ஏம்பலம் ( தனி ) – தமிழ்ச்செல்வன்
நெடுங்காடு ( தனி ) – காமராஜ்
திருநள்ளாறு – ராஜா முஹம்மது
காரைக்கால் வடக்கு – வெங்கடேஷ்
நிரவி டி.ஆர்.பட்டினம் – கணேஷ்
மாஹே – பிரிஜேஷ்
ஏனாம் – தோட்டா ராஜூ

தவெக-வின் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். “பெண்களுக்கு அதிகாரம் என்று மேடையில் முழங்குவது ஒருபுறம் இருக்கட்டும், தேர்தலில் சீட் கொடுப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம்?” எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். புதுச்சேரி போன்ற சிறிய மாநிலத்தில் கூட பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை முன்னுதாரணமாகச் செயல்படுத்த தவறியது ஏன் என்ற விமர்சனம் அக்கட்சியின் மீது தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version